Thursday, June 2, 2011

செல்போன் கதிர்வீச்சால் பரவுகிறது புற்றுநோய்!

செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌களா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோய் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் ( புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார். செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர்.

ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

Wednesday, January 5, 2011

ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்!

பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.

உப்பு:

இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.

ரீபைண்ட் ஆயில்:

செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.

வெண்ணெய், நெய், வனஸ்பதி:

வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.

உலர்ந்த தானியங்கள்:

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

பாலிஷ் அரிசி:

அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சந்தை காய்கறி, பழங்கள்:

உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

பால்:

பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.

கோலா, காபி, டீ:

இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

சர்க்கரை:

சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.
ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.

கண்கள் கவனம்

நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.

1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு நம் கண்களுக்கு பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடிவமைப்பார்கள்.

3. 20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.

பொதுவாக ஒரு நிமிடத்தில் நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

3. இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

4. தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

5. தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப்பட்ட துணியை, அலுவலகத்திற்குச் செல்கையில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்தவுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

6. வைட்டமின்கள்: ஊட்டச் சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.
கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்.

Sunday, April 4, 2010

தொப்பை குறைக்க அன்னாசி

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மரு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும்.

Thursday, March 25, 2010

உணவு வழிகாட்டி

நமது அன்றாட உணவு, ஆரோக்கியமான உணவாய் அமைய எந்த மாதிரியான உணவு பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என்ற உதவிக்குறிப்பினைத் தரும் கூர்நுனிக்கோபுர வடிவ விளக்கப்படத்தினை உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் என்றழைக்கின்றோம். இதில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுவகைகள் கூர்நுனிக்கோபுரத்தின் அகன்ற அடிபாகத்தில் குறிபிடப்பட்டுள்ளது. கூர்மையான மேல்புறத்தில் மிகவும் குறைத்து உண்ணவேண்டிய உணவுவகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது அன்றாட உணவில் ஒரே மாதிரியான உணவு வகைகளைக் கொள்ளாமல், மாறுபட்ட வகைகளைச் சேர்த்து அதன்மூலம் நமக்கு தேவையான ஊட்டங்களையும், சக்தியையும் பெற இந்த உதவிப்படம் வழிகாட்டுகின்றது.

இந்த கூர்நுனிக்கோபுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் ஆறு முக்கிய உணவு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

1. தானிய உணவுகள்
2. காய்கறி உணவுகள்
3. பழ உணவுகள்
4. பால் உணவுகள்
5. இறைச்சி உணவுகள்
6. இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்

இந்த ஆறு வகை உணவுகளுமே மனிதனுக்கு மிகவும் அத்யாவசியமானதுதான் என்றாலும், தினசரி உணவில் எவை, எத்தனை பரிமாறும் அளவுகள் (Servings) சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதனை விளக்குவதுதான் இந்த படத்தின் நோக்கம்.

குறுகிய முதல் நிலையில், மிகவும் குறைவாய் சாப்பிட வேண்டிய இனிப்பு, கொழுப்பு மற்றும் எண்ணெய் வகை உணவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சர்க்கரை, வெண்ணெய், இனிப்பு வகைகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் முதலியன இதில் அடங்கும். இவற்றில் சக்திகள் (Calories) அதிகம் உள்ளன மற்றபடி முக்கிய ஊட்டங்கள் மிகக் குறைந்த அளவே காணப்படுகின்றன.

அடுத்த நிலையில் பொதுவாய் விலங்குகளிடம் இருந்து பெறக்கூடிய உணவுகள் இடம்பெற்றுள்ளன. பால் மற்றும் பாலில் இருந்து பெறப்படும் பொருட்கள் ஒரு பிரிவிலும், முட்டை, இறைச்சி மற்றும் கடல் உணவுகள் மற்றுமொரு பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை உணவுகளில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் மிகுதியாய் உள்ளன. இவை இரண்டு முதல் மூன்று பரிமாறும் அளவுகள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது.

மூன்றாம் நிலையில் பொதுவாய் தாவரங்களில் இருந்து கிடைக்கப் பெறும் உணவுகள் இடம்பெற்றுள்ளன. நமக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தே கிடைக்கின்றது. இவை மூன்று முதல் நான்கு பரிமாறும் அளவுகள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது

இறுதி நிலையான அகன்ற அடிப்பாகத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டிய தானிய உணவு வகைகள் உள்ளன. அரிசி, கோதுமை மற்றும் ப்ரெட்(bread) போன்ற தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் இவற்றில் அடங்கும். ஐந்து முதல் 12 பரிமாறும் அளவுகள் பரிந்துரைக்கப்படுகின்றது.

Tuesday, March 9, 2010

கண்களை களைக்க விடாதீர்கள் – கே.எஸ்.சுப்ரமணி

கம்ப்யூட்டரில் வெகு நேரம் வேலை பார்க்கிறவர்களுக்கு கண் அசதி வருவது உண்டு. திரையில் மினுக் மினுக் என ஒளிர்வதை அடிக்கடி பார்ப்பதால் உடலில் உள்ள உயரித்துடிப்பூட்டுகிற சக்தி மையமான காற்று சிரமத்திற்கு உள்ளாகிறது. ஆயுர்வேத மருத்துவ முறைப்படி நம் உடல் நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் முதலியவற்றால் ஆனது. அடிக்கடி ஒளிரும் கம்ப்யூட்டர் திரையால் உணர்ச்சி மண்டலம் மூளை மற்றும் புலன் உணர்வு பற்றிய நரம்புகள் கூடுதலாக வேலை செய்கின்றன.

இப்படத்திரையைப் பார்த்து ஓய்வின்றி செய்வதால் உடலில் காற்று என்ற பஞ்சபூதம் சிரமத்திற்குள்ளாவதால் மனதில் இறுக்கம் ஏற்படுகிறது. உடனே கண்களும் ஓய்வை விரும்புகின்றன. இதை அறியாமல் மேலும் ஒளிரும் மினக் மினுத்திரையில் திடீர் திடீரென்று மூளைக்கு வேலை கொடுத்து உழைப்பினால் அதிக அலுப்பையே பலரும் பெறுகின்றனர்.

இதைத் தடுக்க அமெரிக்கரான ஜுடித் மாரிஸன் என்ற பெண் டாக்டர், ஆயுர்வேத முறைப்படி நல்லெண்ணையை முகம் முழுவதும் மசாஜ் செய்யச் சொன்னார். பிறகு முழங்கையிலிருந்து விரல் நுனி வரைத் தடவி நன்கு மசாஜ் செய்யச் சொல்கிறார். முகத்திலும் இந்த நல்லெண்ணையால் மசாஜ் செய்ய வேண்டும். அவ்வப்போது உங்கள் கம்ப்யூட்டருக்கு ஓய்வு கொடுத்து கைகள், விரல்களை, நன்கு அமுக்கி விடவும். நீட்டி மடக்கவும். முடிந்தால் அலுவலகத்திற்கு வெளியே வந்து, நல்ல காற்றை ஐந்து நிமிடமாவது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வாங்கிச் செல்லவும்!

கம்ப்யூட்டர் எதிரிலேயே உங்கள் கண்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை ஓய்வு கொடுத்து கண்களில் ஏற்படும் அலுப்பைப் போக்கவும். இதற்கும் இந்த ஆயுர்வேத மருத்துவர் யோசனை சொல்கிறார்.

இருக்கையில் உட்கார்ந்தபடியே முழங்கையை முழங்காலில் அல்லது கம்ப்யூட்டர் டெஸ்க்கில் வைத்துக் கொள்ளவும். கண்களை மூடிக் கொள்ளவும். உள்ளங்கையை விரல்களால் மூடவும். மூன்று நிமிடங்கள் இந்த நிலையில் இருக்கவும். காலையிலும் மதியமும் ஸ்கிரீனில் இருந்து புறப்படும்போது கண்களை மூடிக்கொண்டு அந்தப் பக்கம், இந்தப்பக்கம் மேலே, கீழே என்று விழிகளை திருப்பவும். ஒரு நிமிடம் கண்களைத் திறந்தபடியே எல்லாப் பக்கங்களிலும் ஒரு முறை இதுபோல் பார்த்துவிட்டு கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது நல்லது. உங்கள் செளகரியப்படி இதை செய்து வந்தால் உங்கள் கண்ணின் தசைகள் ஒரே பக்கமாக பார்த்து வேலை செய்த அலுப்பிலிருந்து தப்பிவிடும்.

எழுத்தாளர்களும், கணக்கு வேலை பார்ப்பவர்களும், மூளைக்கும் கண்களுக்கும் ஒரே நேரத்தில் வேலை கொடுக்க வேண்டும். அவர்களும் இரவில் நல்லெண்ணெய் மசாஜ் செய்வதுடன், பகலில் விரல்கள், கைகள், தோள்பட்டை முதலியவற்றை பிடித்துவிட்டுக் கொள்ளவும். மேலும் கண்களுக்கும் பயிற்சி கொடுக்கவும். இது நல்ல பலனைத் தந்து வருகிறதாம்.

Tuesday, January 26, 2010

கு‌ளி‌ர்கால‌த்‌தி‌ல் வரு‌ம் நோ‌ய்க‌ள்

கு‌ளி‌ர் கால‌த்த‌ி‌ல் நோ‌ய்க‌ள் ந‌ம்மை எ‌ளிதாக தா‌க்கு‌கி‌ன்றன. த‌ற்போது ‌பல‌விதமான கா‌ய்‌ச்ச‌ல்க‌ள் வேகமாக பர‌வி வரு‌கிறது.

ஒரு நா‌ள் இ‌ல்லாம‌ல் தொட‌ர்‌ந்து கா‌ய்‌ச்ச‌ல் அடி‌த்து வ‌ந்தா‌ல் மரு‌த்துவ ‌சி‌கி‌ச்சை ம‌ட்டு‌மி‌ன்‌றி ர‌த்த ப‌ரிசோதனை செ‌ய்வது‌ம் அவ‌சியமா‌கிறது.

வ‌ந்‌திரு‌க்கு‌ம் கா‌ய்‌ச்ச‌ல் எ‌ப்படி‌ப்ப‌ட்டது எ‌ன்பதை தெ‌ரி‌ந்து கொ‌ண்ட ‌பி‌ன்ன‌ர்தா‌ன் ‌சி‌‌‌கி‌ச்சையை‌த் துவ‌க்கு‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

மேலு‌ம், உ‌ண்ட உவு ‌‌ஜீரணமாவ‌திலு‌ம் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌ம் எ‌ன்பதா‌ல் ச‌ற்று எ‌ளிதான உணவுகளை உ‌ண்பதா‌ல் வ‌யி‌ற்று‌க் கோளாறுகளை‌த் த‌வி‌ர்‌க்கலா‌ம்.

சரும‌ம் வற‌ண்டு போ‌ய்‌விடு‌ம் கால‌ம் இது. எனவே, கை, கா‌ல்க‌ளி‌ல் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்வது‌ம், தலை‌க்கு எ‌ண்ணெ‌ய் வை‌ப்பதும‌் நமது சரும‌த்தை பாதுகா‌க்கு‌ம் வ‌ழிகளாகு‌ம்.

Friday, November 13, 2009

புற்றுநோயைத் தடுக்கும் கேரட்:

கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம்.

தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு.

உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும்.

வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கும் கேரட் துணை புரிகிறது.இந்த துர்நாற்றத்திற்கு வாயோ, பற்களோ காரணம் அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். வாரத்திற்கு ஐந்து நாட்கள் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வர வாய் துர்நாற்றம் பறந்தோடி விடும்.மேலும் கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியையும் அளிக்கிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த கேரட்டை நீங்களும் அடிக்கடி வாங்கி சமைத்துப் பாருங்களேன்.

Tuesday, November 3, 2009

இடுப்பில் செல்போன் ஆபத்து!

செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எத்தகைய ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று துருக்கி நாட்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடந்தது.

அப்போது இடுப்பில் பெல்ட்டில் செல்போன்களை அணிவதால் எலும்புகள் பாதிக்கப்படும் என்று தெரிய வந்தது.

செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எலும்பு அடர்த்தியை குறைத்து உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்தையும் பலவீனமாக்கி விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

150 பேரிடம் நடந்த சோதனையில் 122 பேர் எலும்புகள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த சோதனை நடந்தது.

Wednesday, September 30, 2009

ரசாயண முறையில் பழுக்க வைக்கும் பழங்களால் ஆபத்து

செயற்கை முறையில் மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழங்களைப் ரசாயன முறையில் பழுக்க வைத்து சாப்பிடுவதில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தானாய் பழுக்க வேண்டியதை தடியால் அடித்துப் பழுக்கவைப்பது என்தெல்லாம் பழமொழி. கால்சயிம் கார்பைட் தான் புதுமொழி. கடைகளில் விற்கப்படும் மாம்பழங்கள் பெரும்பாலும் கார்பைட் கற்களால் பழுக்கவைக்கப்பட்டதாகத்தான் இருக்கும். வியாபாரக் காரணங்களுக்காக அவர அவசரமாகப் பறிக்கப்படும் மாங்காய்களை இயற்கை முறையில் பழுக்க வைக்க சுமார் ஆறு நாட்கள் தேவைப்படும். ஆனால், அதுரை வியாபாரிகளால் லாபம் சம்பாதிக்காமல் இருக்க முடியுமா? அதனால்தான் திருவாளர் கார்பைடின் கைங்கர்யத்தில் பழுக்க வைக்கிறார்கள். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களைச் சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகள்தான் ஏற்படும் என்று சொல்லி வந்தார்கள். ஆனால், கார்பைட் கற்களில் உள்ள ஆர்சனிக் ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தும் எனச் சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள். ஒரு மாம்பழத்தைப் பார்த்தே அது இயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்டதா இல்லையா என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இயற்கையான முறைகளில் பழுக்கவைக்கப்பட்டதெனில் பழும் முழுவதும் ஒரே நிறமாக இருக்கும். கார்பைட் பழுத்தின் நிறம் ஆங்காங்கே அதிகமாகவும் சில இடங்களில் கறைவாகவும் இருக்கும். தவிர பழம் சூடானதாகவும் தோலில் மெல்லிய சுருக்கங்களும் இருக்கும். சுவையான மாம்பழம் என்ற வாங்கி சொந்தத் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ள வேண்டாம். கவனித்து வாங்குங்கள், கழுவி உண்ணுங்கள்.

பழக்கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பளபளா ஆப்பிள்கள் நம் கண்ணைப் பறிக்கும். பறிக்கப்பட்ட ஆப்பிள்கள் கெட்டுப்போகாமல் இருக்க அதன் மீது மெழுகுப் பூச்சு செய்யப்பட்டு பதப்படுத்தப்படுவது வழக்கமானதுதான். அப்படிப் பூசப்படும் மெழுகு தேன் கூடுகளில் இருந்தோ அல்லது தாவர எண்ணெய்களில் இருந்தோ தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அரசின் கட்டுப்பாடு. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் காற்றில பறக்க விடப்பட்டு பலகாலம் ஆகிவிட்டது. இப்போதைய பளபளாவுக்குக் காரணம் பெட்ரோலியப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மெழுகு பூசப்படுவதே. இத்தகைய மெழுகுப்பூச்சுக்கள் ஜீரணக் கோளாறுகளில் துவங்கி பல்வேறு கேடுகளை ஏற்படுத்தும். ‘தினம் ஒரு ஆப்பில் சாப்பிட்டால் மருத்துவரே தேவை இல்லை‘ என்பார்கள். மோசமான மெழுகு பூசப்பட்ட ஆப்பிளைச் சாப்பிடுவதாலேயே, மருத்துவரைத் தேட வேண்டி வரலாம். கவனம்.

மாம்பழங்கள் தவிர்த்து வாழைப்பழங்களும் கூட அரசாங்க விதிமுறைகளை மீறி செயற்கை முறையில் பழுக்கவைக்கப்படுகின்றன. இவ்வகை வாழைப்பழங்களின் காம்பு பச்சையாகவும் பழம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.