மஞ்சள் காமாலை ஒரு பொதுவான பிரச்சனை என்பது அனைவருக்கும் தெரியும்.
பெரும்பாலான நோயாளிகள் மஞ்சள் காமாலைக்கு காரணம் கண்டு பிடிக்க முயற்சிப்பதில்லை. வைரஸ் காரணமாகவோ அல்லது பித்தக் குழாய் அடைப்பு உள்ளிட்ட காரணங்களாலோ மஞ்சள் காமாலை ஏற்படலாம். மஞ்சள் காமாலை ஏற்படும் நிலையில் உரிய காரணத்தைக் கண்டு பிடித்து சிகிச்சை பெறுவதே நல்லது.

நமது நாட்டைப் பொருத்தவரை 90 சதவீதம் மஞ்சள் காமாலைக்கு, வைரஸ்களால் ஏற்படும் அலர்ஜியே காரணம். பித்தக் குழாயில் ஏற்படும் அடைப்புகள், பித்தக் குழாயில் கல், சுருக்கம் மற்றும் புற்று நோய் காரணமாக 10 சதவீதம் பேருக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
வைரஸ் காரணமாக ஏற்படும் மஞ்சள் காமாலையை மருந்துகள் மூலம் குணப்படுத்திவிட முடியும். ஆனால் பித்தக் குழாய் அடைப்பு உள்ளிட்ட காரணங்களால் மஞ்சள் காமாலை ஏற்படும் நிலையில், எண்டாஸ் கோப்பி சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
எனவே ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் நிலையில், அதன் வகையைக் கண்டுபிடிக்க ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். சில சமயங்களில் ரத்தப் பரிசோதனையில் மஞ்சள் காமாலையை உறுதி செய்ய முடியாது. இந்த நிலையில் அலர்ஜியா அல்லது பித்தக் குழாயில் அடைப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வது மிகவும் அவசியம்.
சிறப்பு பரிசோதனை: பித்தக் குழாயில் அடைப்பு இருந்து அது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் உறுதி செய்யப்படும் நிலையில், அடைப்புக்கான காரணத்தை கண்டறிய ‘எம்ஆர்சிபி' என்ற சிறப்புப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். இந்த சிறப்பு சோதனை சிகிச்சை அளிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
எனவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவுடன் ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். ஏனெனில் இத்தகைய பரிசோதனைகளைச் செய்யாமல் இருந்தால், சில சமயம் நோய் முற்றி குறிப்பாக புற்று நோயாக இருந்தால் நோயாளிகளுக்கு மிகுந்த கஷ்டம் ஏற்படும்.

- நன்றி/ சங்கமம்.காம்