பொதுவாக கிராமங்களில் குழந்தைகளின் காதுகளில் எண்ணெய், மூலிகைச் சாறு, வெள்ளைப் பூண்டு சாறு போன்றவற்றை பாட்டி அல்லது தாதியர் ஊற்றுவதைக் கேள்விப்பட்டிருப்போம். அல்லது பார்த்திருப்போம்.
ஆனால் அப்படி எண்ணெய் போன்றவற்றை காதுக்குள் ஊற்றுவது ஆபத்தானது என்று காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் மோகன் காமேசுவரன் கூறியுள்ளார்.
வத்தலகுண்டு அருகே பரசுராமபுரம் பரஸ்பரம் அறக்கட்டளை வளாகத்தில் சென்னை ரிசர்ச் பவுண்டேசன், வத்தலகுண்டு சமையல் எரிவாயு விநியோக நிறுவனமான சந்தோஷ் ஏஜென்சீஸ், பரஸ்பரம் அறக்கட்டளை சார்பில் இலவச காது, மூக்கு, தொண்டை சிகிச்சை முகாமில் பங்கேற்று சிகிச்சை அளித்த பின் செய்தியாளர்களுக்கு டாக்டர் மோகன் காமேஸ்வரன் பேட்டியளித்தார்.
காதுகளில் எண்ணெய் உள்ளிட்ட திரவங்களை ஊற்றுவதும் மிகவும் ஆபத்தானது. தவிர குச்சி, பட்ஸ் போன்றவற்றை நுழைத்து அழுக்கை எடுப்பதும் சரியானதல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
செவிப்பறை சேதமடைந்தால் காது கேட்கும் தன்மை குறைந்து விடும் என்று கூறிய அவர், குழந்தைகள் பேசுவது தாமதமானால் உடனே டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment