Wednesday, April 15, 2009

நெஞ்சு எரிச்சலால் அவதியா?

இன்றைய அவசர யுகத்தில் பாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலரும் மாறிவிடுகின்றனர். இதனால் நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடலாம்.

நெஞ்சு எரிச்சல் வராமலிருக்க, இதோ சில வழிமுறைகள்:

* பொதுவாக அஜீரணக் கோளாறு காரணமாகவே நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. கூடுமானவரை கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

* கொழுப்புச் சத்து மிகுதியாகக் காணப்படும் உணவுப் பண்டங்களை உட்கொள்ளக் கூடாது.

* முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது, சரியான நேரத்தில் உணவருந்த வேண்டும்.

* உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகாத பண்டங்களை உட்கொள்ளக் கூடாது.

* துரித உணவுகளைத் தவிர்த்தல் நன்மை பயக்கும். எண்ணெயில் வறுத்த பலகாரங்கள், சாக்லெட் மற்றும் குளிர்பானங்களை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

* நெஞ்சு எரிச்சல் வந்துவிட்டால், உடனடியாக வாழைப்பழத்தை உட்கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும். அதிக அளவில் குடிநீரைப் பருகுதல் நல்லது.
(மூலம் - வெப்துனியா)

No comments: