வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சீப்பை பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இது கேசத்திற்கு கெடுதலை விளைவிக்கும்.
ஒருவர் பயன்படுத்திய சீப்பையே நண்பர்கள் பலர் அடுத்தடுத்து பயன்படுத்துகிறார்கள். வீடுகளிலும் ஒரே சீப்பை குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்துவது வழக்காக உள்ளது. இதேபோல் சலூன்கள், பார்லர்களில் ஒரே சீப்பு தான் பயன்பாட்டில் உள்ளது.
ஆனால், இந்த போக்கு தவறானது என்கின்றனர் மருத்துவர்கள். ஒரே சீப்பை பயன்படுத்துவதால் ஒருவரது தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவை மற்றவருக்கு வருவதற்கான வாய்ப்புண்டு.
இதேபோல், ஒவ்வாமை உள்ளிட்ட வேறு சில கெடுதல்களும் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன. குறிப்பாக, குழந்தைகள் இவற்றால் எளித்தில் பாதிக்கப்படலாம்.
எனவே ஒரே சீப்பை பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன் சீப்பை தூய்மையாகவும் வைத்திருப்பது நல்லது.
(மூலம் - வெப்துனியா)
Wednesday, April 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment