Wednesday, April 15, 2009

பிரட் சாப்பிடுகிறீர்களா? கொஞ்சம் நில்லுங்க...

தற்போதைய அவரச யுகத்தில் நமக்கு பெரிதும் உதவுக்கூடிய உணவு வகை பிரட். இதனால் உடல் நலத்திற்கு கேடு வர வாய்ப்ப்ருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ப்ரெட் குறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள், நம்மை திடுக்கிட வைக்கின்றன.

பொதுவாக ப்ரெட் சாப்பிட்டால் ஆபத்து ஏதும் இல்லை. கூடுமானவரை பிரட் தயாரிக்கப்பட்ட தினத்தன்றே அதைச் சாப்பிட வேண்டுமாம்.

ப்ரிட்ஜில் பல நாட்கள் வைத்து, பாதுகாத்து பிறகு பிரட்டை உபயோகிக்கும் போது அதன் மீது கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைக் காளான் படிகிறது. அவற்றில் சில வகை பூஞ்சைகள் விஷத்தன்மை கொண்டது.

இதனை அப்லாடாக்ஸின்- பி என்கின்றனர். இது, சில பாக்டீரியாக்களுடன் ரசாயன மாற்றம் ஏற்பட்டு நைட்ரேட் பொருளை வெளிப்படுத்தும். இவை, மிகுந்த அபாயகரமான புற்று நோய் உண்டாக்கும் ஊக்குவிப்பான்கள்.

எனவே ‌பிர‌ட்டை‌ப் பய‌ன்படு‌த்து‌‌ம் போது ‌‌மிகு‌ந்த எ‌ச்ச‌‌ரி‌க்கை‌த் தேவை. தயாரிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் சாப்பிட்டுவிடுவது நல்லது.
(மூலம் - வெப்துனியா)

No comments: